Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 738)
Paththati 22 - காஞ்சன பத்ததி
சந்த்ராக்ருதி: கதம் அகல்பயதா: ததாநீம் வைமாநிக ப்ரணயிநீ நயந அம்புஜாநாம் விக்ராந்தி கால விததேந நிஜேந தாம்நா பாலாதபம் பலிவிமர்த்தந பாதுகே த்வம்
மஹாபலியை அடக்கிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கமயமான (சந்திரன்) உருவம் கொண்ட நீ, ஸ்ரீரங்கநாதன் உலகம் அளந்தபோது, உலகம் முழுவதும் உனது ஒளியானது பரவும்படிச் செய்தாய். அப்போது தேவலோகப் பெண்களின் முகங்கள் என்னும் தாமரைகள் மலரும்படியான இளம் வெய்யிலை எப்படி உண்டாக்கினாய்? (சந்த்ர ஒளி தாமரையை மூடிவிடும். ஆனால் இங்கு முகத்தாமரைகள், சந்த்ர ஒளி கண்டதும் எப்படி மலந்தன? அதில் சூரிய ஒளி எப்படிக் கலந்தது? என்கிறார்).