Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 737)

Paththati 22 - காஞ்சன பத்ததி

காந்த்யா பரம் புருஷம் ஆப்ரணகாத் ஸுவர்ணம் கர்த்தும் க்ஷமா த்வம் அஸி காஞ்சந பாதரக்ஷே அந்யாத்ருசீம் திசஸி யா விநதஸ்ய தூராத் ஆரக்வதஸ்பக ஸம்பதம் இந்து மௌளே

தங்கமயமான பாதுகையே! உன்னுடைய எல்லையற்ற ஒளி மூலமாக ஸ்ரீரங்கநாதனை, அவனது திருவடி நகம் முதல் தலை வரை தங்கமயமாக மின்னும்படிச் செய்யும் சக்தியைப் பெற்றுள்ளாய். சிவன் உன்னைத் தள்ளி நின்று வணங்கும்போது, அவனது தலையில் உள்ள சந்திரன் மீது உன் தங்கத்தின் ஒளி விழுகிறது. இதனால் அந்தச் சந்த்ரன் கொன்றை மலர்க்கொத்து போன்று காணப்படுகிறான்.