Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 736)
Paththati 22 - காஞ்சன பத்ததி
ப்ரதிபந்ந மயூர கண்ட தாம்நா பரிசுத்தேந பதாவநி ஸ்வகேந கமலா ஸ்தந பூஷணோசிதம் தத் பவதீ ரத்நம் அலங்கரோதி ஹேம்நா
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய தங்கம் என்பது மயில் கழுத்தின் நிறம் கொண்ட தூய்மையான தங்கமாக உள்ளது. இப்படிப்பட்ட தங்கத்தைக் கொண்டு நீ செய்வது என்ன? ஸ்ரீரங்கநாச்சியாரின் ஸ்தனங்களுக்கு ஆபரணமாக உள்ள இரத்தினக்கல்லை (இந்த இரத்தினக்கல் = ஸ்ரீரங்கநாதன்) உன்னில் பதித்துக்கொண்டு, அந்த இரத்தினத்தை (ஸ்ரீரங்கநாதனை) மேலும் அழகுபடுத்துகிறாய்.
இரத்தினக்கல்லானது தங்கத்தில் பதிக்கப்பட்டால் மேலும் அழகாகக் காணப்படும். இங்கு ஸ்ரீரங்கநாதனை இரத்தினக்கல்லாகக் கூறுகிறார். அவன் தங்கமயமான பாதுகையில் மேலும் அழகாக உள்ளான் என்கிறார்.