Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 735)

Paththati 22 - காஞ்சன பத்ததி

ஸதி வர்ணகுணோ ஸுவர்ணஜாதே: ஜகதி க்யாதம் அஸௌரபாத் அவர்ணம் ச்ருதி ஸௌரப சாலிநா ஸ்வஹேம்நா பவதீ சௌரி பதாவநி வ்யுதாஸ்த்தத்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கத்திற்கு உயர்ந்த பளபளப்பு என்னும் தன்மை உள்ள போதிலும், அதற்கு வாசனை இல்லை என்ற குறைபாடு உலகில் உண்டு. இந்தக் குறையை வேதங்களின் வாசனையுடன் கூடிய உனது தங்கம் கொண்டு நீ போக்கினாய் போலும்.