Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 734)

Paththati 22 - காஞ்சன பத்ததி

ஸுரபி: நிகமை: ஸமக்ர காமா கநக உத்கர்ஷவதீ பதாவநி த்வம் திசஸி ப்ரதிபந்ந மாதவச்ரீ: அநிசோந்நித்ரம் அசோக வைபவம் ந:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களின் வாசனை நிரம்பியவளாக, உயர்ந்த குணங்கள் நிறைந்தவளாக, தங்கத்தின் மேன்மையைக் கொண்டவளாக, ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்தைப் பெற்றவளாக நீ உள்ளாய். இதனால் நீ எப்போதும் மலர்ந்தபடி, துக்கம் என்பதே இல்லாத தன்மையை எங்களுக்கு அளிக்கிறாய்.

இங்கு வேதங்களின் வாசனை என்பதை வஸந்தகாலம் என்றும், ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்து என்பதை வைகாசி மாதம் என்றும் பொருள் கொள்வர். இப்படிக் கொள்ளும்போது, துக்கம் இல்லாத தன்மை என்பதை அசோக (அசோக = அ + சோக = சோகம் இல்லாத) மரங்களின் செழிப்பு என்று பொருள் கொள்வர்.