Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 733)

Paththati 22 - காஞ்சன பத்ததி

நிகக்ஷீக்ருத ரம்ய க்ருஷ்ணரத்நா பவதீ காஞ்சந ஸம்பதம் வ்யநக்தி பரிபுஷ்யதி பாதுகே யதீக்ஷா ஸஹஸா ந: ஸம லோஷ்ட காஞ்சந த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் அழகான நீல நிற உரைகல்லை வைத்துக் கொண்டு, உன்னை இழைத்துக் காண்பித்து நிற்கிறாய். இதனால் எங்களுக்கு இந்தப் பூமியில் உள்ள தங்கம் அனைத்தும் ஓட்டாஞ்சில்லுக்குச் சமமாகவே தோன்றுகின்றன (பாதுகையின் தங்கம் மட்டுமே தங்கம், மற்றவை தங்கம் அல்ல எனத் தோன்றுகிறது. அதாவது பாதுகையே உயர்ந்தது, மற்ற அனைத்தும் ஒரே போன்று தாழ்ந்ததே எனறு கருத்து).