Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 732)

Paththati 22 - காஞ்சன பத்ததி

மதுஜித் தநு காந்தி தஸ்கராணாம் ஜலதாநாம் அபயம் விதாது காமா சபலேவ ததங்கிரிம் ஆச்ரயந்தீ பவதி காஞ்சந பாதுகே விபாதி

தங்கமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அழகான திருமேனி நிறத்தை அபஹரித்த மேகங்கள் பயந்து நின்றன. அவன் திருவடிகளில் வந்து அவை பணிகின்றன. அவற்றின் பயங்களை நீக்க எண்ணிய நீ, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த மின்னல் போன்று காணப்படுகிறாய்.