Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 731)

Paththati 22 - காஞ்சன பத்ததி

கல்யாணா ப்ரக்ருதிம் வந்தே பஜந்தீம் காஞ்சந ச்ரியம் பத அர்ஹாம் பாதுகாம் சௌரே: பத ஏவ நிவேசிதாம்

அனைத்து உலங்களுக்கும் ஏற்ற நன்மையை அளிக்கவல்ல ஸ்வபாவம் கொண்டவளும், தனிப்பட்ட மேன்மையை அடைந்தவளும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ளதற்குத் தகுதி கொண்டவளும், எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளவளும் ஆகிய பாதுகையை நான் வணங்குகிறேன்.