Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 730)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ஹரி பத நகேஷு பவதீ ப்ரதிபலதி தவ ஏதத் அபி ரத்நேஷு உசிதா மித: பதாவநி பிம்ப ப்ரதிபிம்பிதா யுவயோ:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களை நீ பிரதிபலிக்கிறாய். அவனது திருவடியானது உன்னுடைய இரத்தினங்களில் பிரதிபலிக்கிறது. இப்படியாக நீங்கள் இருவரும் (திருவடி, பாதுகை) பிம்பமும், பிரதிபிம்பமாக உள்ள நிலையானது வெகு பொருத்தமாகவே உள்ளது.