Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 729)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
ஏகாம் ஏக: கில நிரவிசத் பாதுகே த்வாரகாயாம் க்ரீடா யோகீ க்ருதபஹுதநு: ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ரே சுத்தே தேவி த்வத் உபநிஹிதே பிம்பித: ரத்ந ஜாலே: புங்க்தே நித்யம் ஸ கலு பவதீம் பூமிகாநாம் ஸஹஸ்ரே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! துவாரகையின் பதியான க்ருஷ்ணன், இந்த உலகில் பல லீலைகள் செய்தவனாக, யோகியாக, பல சரீரங்களை எடுத்தவனாக, பதினாறாயிரம் பெண்களை, ஒருத்தியை ஒருவனாக நின்று அனுபவித்தான். அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் இங்கு உன் மீது இழைக்கப்பட்ட பலவிதமான இரத்தினங்களில், பல பிரதிபிம்பங்களாக நின்று, தனது பல்லாயிரம் உருவங்கள் மூலம், உன்னை அனைத்துக் காலங்களிலும் அனுபவித்து மகிழ்கிறான் போலும்.