Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 728)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
த்வாம் ஏவ ஏகாம் அதிகதவத: கேளி ஸஞ்சார காலே பார்ச்வே ஸ்த்தித்வா விநிஹித த்ருசோ: பாதுகே அநந்ய லக்ஷ்யம் த்வத் ரத்நேஷு ப்ரதிபலிதயோ: நித்ய லக்ஷ்ய ப்ரஸாதா பத்மா பூம்யோ திசதி பவதீ பாதஸேவாம் முராரே:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனது உல்லாஸமான ஸஞ்சார காலங்களில் மிகவும் தெளிவாக உள்ள உன்னை மட்டுமே பற்றியவனாக ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கிறான். அப்படி அவன் ஸஞ்சரம் செய்கையில் அவன் அருகில் அமர்ந்தபடி, உன் மீது மட்டுமே தங்கள் கண்களை வைத்து, வேறு எதனையும் பாராமல், அவனது உபயநாச்சிமார்கள் வீற்றுள்ளனர். அப்போது அவர்களின் பிரதிபிம்பங்கள் உனது இரத்தினக்கற்களில் தெரிகிறது. இதன் மூலம், நீ ஸ்ரீரங்கநாதனுக்குச் செய்யும் திருவடி கைங்கர்யத்தை அவர்களுக்கும் அளிக்கிறாய் போலும் (அதாவது, அவர்களும் அந்தப் பாதுகையில் பிரதிபலிப்பதால், அவர்களும் ஸ்ரீரங்கநாதனுக்குப் பாதுகைகள் போன்றே நின்று கைங்கர்யம் செய்கின்றனர்).