Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 727)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ஸ்வேச்சாகேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரந்த அபிராமாம் ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணோ நிர்விசந் ரங்கநாத: ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா சேஷசய்யாதிரூட: த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷயாத்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அன்பான தோழியாகவும், தோஷங்கள் இல்லாத இரத்தினங்களால் அழகு சேர்க்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னைச் சாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கநாதன், பல இடங்களில் ஸஞ்சாரம் செய்கின்றான். உன் மீது தனது திருவடிகளை வைத்தவனாக, தனது விருப்பப்படி லீலைகள் செய்கின்றான். முடிவில் உன்னை விட்டு, ஸ்ரீரங்கநாச்சியாருடன் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் ஏறிய போதிலும், உன்னில் காணப்படும் தனது பிரதிபிம்பம் காரணமாக, உன்னை விட்டுப் பிரியாதவனாகவே ஆகிறான்.