Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 726)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ஸ்வச்ச ஆகாரம் ஸுரயுவதய: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத் காஹந்தே த்வாம் ப்ரணதி ஸமயே பாதுகே ஸாபிமாநா: ஸ்த்ரீ ரத்நாநாம் பரிபவவிதௌ ஸ்ருஷ்டி மாத்ரேண தக்ஷாம் நீசை: கர்த்தும் நரஸகமுநே: ஊர்வசீம் ஊரு ஜாதாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரன் என்னும் முனிவரின் தோழரான நாராயண முனிவரின் தொடையில் இருந்து தோன்றியவள் என்ற உற்பத்திக் காரணத்தினால் ஊர்வசி என்பவள், மற்ற பெண்களை அவமானப்படுத்தியபடி நின்றாள். அவளது கர்வத்திற்குத் தாழ்மை ஏற்படுத்தும் பொருட்டு தேவலோகப் பெண்கள் உன்னை வணங்கி நின்றனர். அப்போது, தெளிந்த உருவம் கொண்ட உனக்குள் தங்களின் பிரதிபிம்பம் உண்டாகிறது என்ற பெருமையுடன் உன்னுள் புகுகின்றனர்.