Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 725)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
பகவதி கருட: தே வாஹநஸ்தா: ஸுரேந்த்ர: த்வயி விநிஹிதபதே பூமிமேவ ஆச்ரயந்தி தத் அபி சரணரக்ஷே ரத்நஜாலே த்வதீயே ப்ரதிபலித நிஜங்கா: துல்ய வாஹா பவந்தி
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கருட வாகனத்தில் வீற்றுள்ளபோது, மற்ற தேவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தபடி உள்ளனர். ஸ்ரீரங்கநாதன் உன் மீது திருவடிகள் வைத்து நின்றவுடன், அவர்கள் பூமியை அடைந்துவிடுகின்றனர் (வாகனங்களில் இருந்து இறங்கி விடுகின்றனர்). ஆனால் உனது இரத்தினக்கற்களில் அவர்களின் ப்ரதிபிம்பம் காணப்படுவதால், ஒரே போன்று வாகனம் உள்ளதாகத் தோன்றுகிறது.