Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 724)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ப்ரதிதிசம் உபயாதே தேவி யாத்ரா உத்ஸவார்த்தம் த்வயி விஹரணகாலே பிம்பிதே ஜீவலோகே வஹஸி மணிகணை: த்வம் பாதுகே ரங்கபர்த்து: கபளித ஸகலார்த்தம் காஞ்சித் அந்யாம் அவஸ்தாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைதேவியே! ஸ்ரீரங்கநாதன் திருவீதிகளில் ஸஞ்சாரம் செல்வதற்காகப் புறப்பட்டவுடன், அவனை வணங்க அனைத்து திசைகளில் இருந்தும் பல உயிர்களும் வந்து நிற்கின்றன. அவற்றின் உருவங்கள், உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்களில் ப்ரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதன் அனைத்தையும் விழுங்கிய நிலையில் உள்ள தன்மையை நீ காண்பிக்கிறாய் (ப்ரளயகால நிலை) போலும்.