Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 723)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
வையாகுலீம் சமயிதும் ஜகத: வஹந்த்யா ரக்ஷாதுராம் ரகுதுரந்தர பாதரக்ஷே ப்ராஜ்யம் யச: ப்ரசுர சாமர பிம்பலக்ஷாத் ப்ராய: த்வயா கபளிதம் ப்ரதிபூபதீநாம்
ரகு குலத்தினரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் கானகம் சென்று பின்னர் இந்த உலகைக் காப்பாற்றும் திறன் உள்ளவர்கள் இல்லாத காரணத்தினால் பெருங்குழப்பம் உண்டானது. அப்போது உலகைத் தாங்கும் பொறுப்பை நீ ஏற்றாய். அப்போது உன்னில் உள்ள இரத்தினக்கற்களில், உனக்கு வீசப்பட்ட சாமரங்களின் பிரதிபிம்பங்கள், பலவாகக் காட்சி அளித்தன. இதனைக் காணும்போது பல எதிரி அரசர்களின் புகழை நீ விழுங்கியது போன்று இருந்தது.