Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 722)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ப்ரத்யாகதே விஜயிநி ப்ரதமே ரகூணாம் விந்யஸ்யதி த்வயி பதம் மணிபாதரக்ஷே ரத்நௌக பிம்பித நிசாசர வாநராம் த்வாம் பூர்வக்ஷணஸ்த்த்தம் இவ புஷ்கரம் அந்வபச்யந்

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வென்று திரும்பிய ரகுகுலத்தின் சிகரமான இராமன், உன் மீது தனது திருவடிகளை மீண்டும் வைத்தான். அப்போது அங்கு சுற்றி நின்ற ராக்ஷஸர்கள், வானரர்கள் என்ற பலரும் உனது இரத்தினக்கற்களில் பிரதிபலித்தனர். இதனைக் காணும்போது, இராமன் உன்னைச் சாற்றிக் கொள்வதற்கு முன்பு இருந்த புஷ்பக விமானம் போன்று காணப்பட்டாய் (இலங்கையில் இருந்து இராமனுடன் புஷ்பக விமானத்தில் ராக்ஷஸர்கள், வானரர்கள் போன்ற பலரும் வந்தனர். இதனைக் கூறுகிறார்).