Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 721)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

காலேஷு ராகவ பதாவநி பக்திநம்ர: கார்யாணி தேவி பரத: விநிவேதயம்ஸ்தே த்வத் ரத்ந பிம்பிததயா அபி முஹு: ஸ்வகீயாம் ராஜாஸந ஸ்த்திதிம் அவேக்ஷ்ய ப்ருசம் லலஜ்ஜே

இராமனின் பாதுகையே! உனக்கு அந்தந்த காலங்களில் பக்தியினால் வணங்கியபடி, செய்ய வேண்டியவற்றைச் செய்தபடி பரதன் உள்ளான். உன்னிடம் அடுத்த வேலை என்ன என்று விண்ணப்பம் செய்வதற்காக உன் முன்பு பரதன் நிற்கும் போது, உனது இரத்தினக்கற்களில் தனது உருவத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறான். அதில் தான் ஸிம்ஹாஸனத்தில் உள்ளதை பிரதிபிம்பமாகக் காண்கிறான். இதனைக் கண்டு மிகவும் வெட்கம் அடைந்தான்.