Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 720)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
ஆலோல ரச்மி நியதாம் மணிபாதுகே த்வாம் ஆருஹ்ய ஸஞ்சரதி ரங்கபதௌ ஸலீலம் அந்த: புரேஷு யுகபத் ஸுத்ருசோ பஜந்தே டோளாதிரோஹண ரஸம் த்வயி பிம்பிதாங்க்ய:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கயிறுகளால் கட்டப்பட்ட ஊஞ்சல் போன்ற உன் மீது, ஸ்ரீரங்கநாதன் அந்தப்புரங்களில் ஸஞ்சரிக்கிறான். அப்போது உன்னிடம் பிரதிபலிக்கப்பட்ட பிராட்டிமார்களின் உருவங்களைக் காணும்போது, ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் ஊஞ்சல் ஆடும் இன்பத்தை அடைவதாகத் தோன்றுகிறது.