Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 719)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
உச்சாவசேஷு தவ ரத்நகணேஷு மாத: வேதா: ப்ரயாண ஸமயே ப்ரதிபிம்பித அங்க: ஆசங்கதே மதுபிதோ மணிபாதுகே த்வாம் ஆகாமி கல்ப்ப கமலாஸந பங்க்தி கர்ப்பாம்.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! நான்முகனின் சரீரமானது, அவன் தனது உலகிற்குப் புறப்படும் நேரத்தில், எல்லையற்ற இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட உன்னில், பலவாகப் பிரதிபலிக்கிறது. இதனைக் கண்ட நான்முகன், இனி வரப்போகும் கல்பங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நான்முகன்களின் வரிசையை நீ உனக்குள் கொண்டுள்ளாயோ என்று எண்ணுகிறான் (ஒவ்வொரு கல்பத்திலும் ஒரு நான்முகன் ஏற்படுவான்).