Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 718)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
யாத்ரா அவஸாநம் அதிகச்சதி ரங்கநாதே விச்ராணயஸி அநுபதம் மணிபாதுகே த்வம் ப்ராய: ப்ரயாண ஸமயே ப்ரதிபிம்பிதாநாம் தீர்த்தாவகாஹம் அபரம் த்ரிதசேச்வராணாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய உத்ஸவங்களின் இறுதி நாளில், தேவர்கள் தங்கள் உலகிற்கு மீண்டும் புறப்படத் தொடங்குகின்றனர். அப்படி அவர்கள் புறப்படும்போது, அவர்களின் பிரதிபிம்பம் உன்னில் தெரிகிறது. இதனைக் காணும்போது, அவர்கள் மற்றோரு முறை நீராடிச் செல்வதை நீ உண்டாக்கிக் கொடுப்பதாகத் தோன்றுகிறது.