Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 717)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
பாதார்ப்பணத் ப்ரதம: ஹரிதச்ம ரம்யே மத்யே தவ ப்ரதிபலந் மணிபாதரக்ஷே மந்யே நிதர்சயதி ரங்கபதி: யுகாந்தே ந்யக்ரோத பத்ர சயிதம் நிஜமேவ ரூபம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸஞ்சாரம் செய்வதற்காக உன் மீது திருவடியை வைத்து ஸ்ரீரங்கநாதன் எழுவதற்கு முன்பாக, உன்னில் இருக்கும் பச்சை நிற இரத்தினங்களில் பிரதிபலிக்கிறான். இதனைக் காணும்போது, ப்ரளய காலத்தில் ஆலிலை மீது சயனித்துள்ள தனது உருவம் இப்படித்தான் இருக்கும் என்று எங்களுக்கு அவன் காண்பிப்பதாக நான் எண்ணுகிறேன்.