Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 716)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

ரங்கேச்வரஸ்ய நவ பல்லவ லோபநீயௌ பாதௌ கதம் நு கடிநா ஸ்வயம் உத்வஹேயம் இதி ஆகலய்ய நியதம் மணிபாதுகே த்வம் பத்மாஸ்தரம் வஹஸி தத் ப்ரதிபிம்ப லக்ஷாத்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ”புதிய தளிர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மென்மையாக உள்ளன. இவற்றை எனது கடினமான பரப்பு மீது (இரத்தினக்கற்கள் உள்ளதால் பாதுகையின் மேல்பரப்பு சற்றே கடினமாக உள்ளது) எப்படி வைத்துக் கொள்வேன்?”, என்று நீ யோசிக்கிறாய். இதனால்தான் அந்தந்த திருவடிகளின் பிரதிபிம்பம் என்ற தாமரை மலர் போன்றுள்ள விரிப்பை, உன் மீது விரித்துக் கொண்டு , அதன் மீது ஸ்ரீரங்கநாதனை வைத்துக்கொள்கிறாய் போலும்.