Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 715)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

உபநீதம் உபாயநம் ஸுரேந்த்ரை: ப்ரதிபிம்பச்சலத: த்வயி ப்ரவிஷ்டம் ஸ்வயம் ஏவ கில ப்ரஸாத பூம்நா ப்ரதி க்ருஹ்ணாஸி முகுந்த பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த்ரன் உள்ளிட்ட தேவர்கள் மூலமாக உனக்குக் கொண்டு வரப்பட்ட உபஹாரங்கள் (பழம் முதலானவை), உன்னுடைய இரத்தினக்கற்களில் பிரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது, உன்னுடைய கருணை காரணமாக அவர்களிடமிருந்து அந்தப் பொருள்களை நீ நேரடியாகவே பெற்றுக் கொள்வது போன்று உள்ளது.