Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 714)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
மணி மௌளி சதேந பிம்பதேந ப்ரணதாநாம் பரித: ஸுர அஸுராணாம் முரபித் மணிபாதுகே மஹிம்நா யுகபத் தேஷு ஸமர்ப்பிதேவ பாஸி
முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னை வணங்கும் தேவர்கள் நான்கு புறங்களிலும் நின்று, தங்கள் க்ரீடங்களைத் தாழ்த்தி வணங்குகின்றனர். அப்போது அவர்களின் க்ரீடங்கள் உன்னில் உள்ள இரத்தினங்களில் பிரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது, உன்னுடைய எல்லையற்ற சக்தி காரணமாக, ஒரே நேரத்தில் அந்த க்ரீடங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டவள் போன்று விளங்குகிறாய்.