Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 713)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

மணி பங்க்திஷு தே திசாம் அதீசா: ப்ரதிபிம்பாதி நிஜாநி வீக்ஷமாணா: அபியந்தி முகுந்த பாதுகே த்வாம் அதிகாராந்தர ஸ்ருஷ்டி சங்கயேவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் பிரதிபிம்பத்தைக் காண்கின்றனர். இதனைக் கண்டவுடன் அவர்கள் தங்கள் மனதில், ”ஸ்ரீரங்கநாதன் நம்மைப் போன்று மற்றோர் அஷ்டதிக் பாலகர்களைப் படைத்துவிட்டானோ”, என்று சந்தேகம் கொண்டபடி உன்னிடம் வருகின்றனர்.