Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 712)
Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி
கமலாபதி பாதுகே கதாசித் விஹசேந்த்ர: த்வயி பிம்பிதோ விபாதி ஸவிலாஸ கதே அபி ரங்கபர்த்து: நிஜம் ஆத்மாநம் இவ உபதாது காம:
ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒரு ஸமயம் கருடன் உனது இரத்தினக்கற்களின் முன்பாக நின்று, அதில் பிரதிபிம்பமாகத் தான் தெரிய வேண்டும் என்று எண்ணினான். இதன் காரணம் - ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடையில் கூட தனது சரீரம் அவனுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எண்ணினான் போலும்.
தரையில் ஸஞ்சாரம் செய்யும்போது பாதுகைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, கருடனுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட காலங்களில் தானும் பயன்பட வேண்டும் என்ற எண்ணிய கருடன், தனது உருவம் பாதுகையில் உள்ள இரத்தினங்களில் பிரதிபிம்பமாக விழவேண்டும் என்று எண்ணினான்.