Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 709)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
ப்ரதீம: த்வாம் பாதாவநி பகவதோ ரங்கவஸதே: கநீபூதாம் இத்தம் பதகமல மாத்த்வீ பரிணதீம் ஸ்புரந்த: பர்யந்தே மதகரிம நிஸ்பந்த மதுப ப்ரஸக்திம் யத்ரைதே விதததி மஹாநீலமணய:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்க விமானத்தில் சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில் பெருகும் தேன் கெட்டியாக நிற்பது போன்றே உனது உருவம் உள்ளது என்று எண்ணுகிறோம். இப்படிப்பட்ட உன்னிடம் காணப்படும் பல இந்திரநீலக் கற்கள், இந்தத் தேனின் சுவைக்காக வந்து மொய்த்தபடி, அசையாமல் உள்ள வண்டுகள் போன்றே காணப்படுகின்றன.