Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 708)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

நிரந்தர புரந்தரோ பலபுவம் த்யுதிம் தாவகீம் அவைமி மணிபாதுகே ஸரணி ஸங்கிநீம் ரங்கிண: ததீய நவ யௌவந த்விரதமல்ல கண்டஸ்த்தலீ களந் மதஜளஞ்ஜளா பஹுள கஜ்ஜள ச்யாமிகாம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் நெருக்கமாக பதிக்கப்பட்ட உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது ஸ்ரீரங்கநாதன் செல்லும் வழி எங்கும் பரவுகிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் - ஸ்ரீரங்கநாதனின் இளமை என்னும் பெரியயானையின் கன்னங்களில் பெருகி நிற்கின்ற மதநீரானது, அங்கு உறைந்து கெட்டியாகக் காணப்படும் மை போன்று உள்ளது.