Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 707)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
அக்ஷ்ணோ: அஞ்ஜநகல்பநா யவநிகா லாஸ்ய ப்ரஸூடே: கதே: சித் கங்கா யமுநா முகுந்த ஜலதே வேலா தமாலாடவீ காந்தா குந்தள ஸந்ததி: ச்ருதி வதூ கஸ்தூரி காலங்க்ரியா நித்யம் ரத்நபாதாவநி ஸ்ப்புரதி தே நீலாமணி ச்ரேணிகா
இரத்தினமயமான பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது ஆறுவிதமான செயல்களைச் செய்கிறது. அவையாவன – ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களின் கண்களுக்கு மை தடவுகிறது; ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடை என்பதற்கு முன்பாக (புறப்பாட்டுத் திரை) இடப்படும் திரையாக உள்ளது; அறிவு என்ற கங்கைக்கு யமுனை போன்று உள்ளது; ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற ஸமுத்திரத்தின் கரையில் உள்ள பாசி போன்று உள்ளது; ஸ்ரீரங்கநாச்சியார் முதலான பிராட்டிகளின் முன்நெற்றி முடி போன்று உள்ளது; ச்ருதிகள் என்னும் பெண்கள் இட்டுக் கொள்ளும் கஸ்தூரி திலகம் போன்று உள்ளது.