Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 706)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

யா தே பாஹ்யாங்கணம் அபியத: பாதுகே ரங்கபர்த்து: ஸஞ்சாரேஷு ஸ்புரதி விததி: சக்ரநீல ப்ரபாயா: விஷ்வக்ஸேந ப்ரப்ருதிபி: அஸௌ க்ருஹ்தே வேத்ர ஹஸ்தை: ப்ரூவிக்ஷேப: தவ திவிஷதாம் நூநம் ஆஹ்வாநஹேது:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலங்களில் உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது எங்கும் பரவி நிற்கிறது. இதனைப் பார்த்தால் எப்படி உள்ளது என்றால் – கையில் பிரம்பு வைத்துக் கொண்டுள்ள விஷ்வக்ஸேநர் போன்றவர்களால் ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும்படியாக, தேவர்களை அழைப்பதற்குக் காரணமாக உள்ள புருவ அசைவு போன்று உள்ளது.

இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது பாதுகையின் புருவ நெறிப்பு போன்று உள்ளது. இந்தச் செயல் மூலம் பாதுகை, விஷ்வக்சேநர் போன்றவர்களுக்குக் கட்டளை இடுகிறாள். உடனே விஷ்வக்சேநர் போன்றவர்கள், ”நம்பெருமாள் புறப்பாடு ஆகிவிட்டது”, என்று அறிந்து, தேவர்களை அழைக்கின்றனர்.