Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 705)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
பாத ந்யாஸ ப்ரிய ஸஹசரீம் பாதுகே வாஸகேஹாத் த்வாம் ஆருஹ்ய த்ரிசதுரபதம் நிர்கதே ரங்கநாதே அந்த: ஸ்நிக்தை: அஸுர மஹிளாவேணி விக்ஷேப மித்ரை: ச்யாமச்சாயம் பவதி பவநம் சக்ர நீல அம்சுபி: தே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை எடுத்து வைக்கின்ற செயலுக்கு நீ ப்ரியமான தோழியாக உள்ளாய். தனது சயன அறையில் இருந்து எழுகின்ற ஸ்ரீரங்கநாதன், உன் மீது தனது திருவடிகளை வைத்து, மூன்று நான்கு அடிகள் நடக்கிறான். அப்போது, அழகான தேவலோகப் பெண்களின் அவிழ்ந்த, அலை போன்றுள்ள கூந்தல் போன்று காணப்படும் உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது, திருவரங்கம் பெரியகோயில் முழுவதும் பரவி, எங்கும் நீல நிறமான ஒளி உள்ளதாகச் செய்கிறது.