Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 704)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

நித்யம் லக்ஷ்மீ நயநருசிரை: சோபிதா சக்ரநீலை: ஸாளக்ராம க்ஷிதிரவ சுபை: சார்ங்கிண: ரூபபேதை: ஸாகேதாதே: ஸமதிககுணாம் ஸம்பதம் தர்சயந்தீ முக்திக்ஷேத்ரம் முநிபி: அகிலை: பாதுகே கீயஸே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகான திருக்கண்கள் போன்று காணப்படுகின்றன. அவை மூலம் நீ, ஸ்ரீரங்கநாதனின் ஒரு வித மூர்த்தியான ஸாளக்ராம உருவங்களைக் காண்பிக்கிறாய் (இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களைப் போன்று உள்ளன என்கிறார்). இதனால் நீ ஸாளக்ராம க்ஷேத்ரம் போன்று விளங்குகிறாய். மோக்ஷம் அளிக்கவல்ல அந்த க்ஷேத்ரத்தைக் காட்டிலும் நீ அதிகமான சிறப்புடையவளாக உள்ளாய். இதனால் அனைத்து முனிவர்களாலும் முக்திக்ஷேத்ரம் என்றே பாடப்படுகிறாய்.

நமது இல்லத்தில் பன்னிரண்டு ஸாளக்ராம மூர்த்திகள் இருந்தாலே அது ஸாளக்ராம க்ஷேத்ரம் எனப்படும். ஆனால் பாதுகையில் பல இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களாகவே உள்ளதால், பாதுகை உள்ள இடம் முக்திக்ஷேத்ரம் என்றே கொண்டாடப்படலாம்.