Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 703)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

ஸத்பி: ஜுஷ்டா ஸமுதித விது: ஜைத்ர யாத்ரா விநாதேஷு ஆதந்வாநா ரஜநிம் அநகாம் இந்த்ரநீல அம்சுஜாலை: சித்ரம் க்யாதா குமுதவநத: பாதுகே புஷ்யஸி த்வம் வ்யாகோசத்வம் விபுதவநிதா வக்த்ர பக்கேருஹாணாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸாதுக்கள் என்னும் நக்ஷத்திரங்களால் அடையப்படுகிறாய்; வெற்றியை மட்டும் உண்டாக்கவல்ல உல்லாஸ ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன் என்ற சந்த்ரனைக் கொண்டுள்ளாய்; இந்த்ரநீலக் கற்களின் குவியல் மூலமாக தோஷம் இல்லாத இரவுப்பொழுதை உண்டாக்குகிறாய்; இரவில் மலர்கின்ற ஆம்பல் மலர்களுக்கு நீ தேவதையாக உள்ளாய். இப்படியாக உள்ள நீ தேவலோகப் பெண்களின் முகங்கள் என்னும் தாமரை மலரையும் மலரச் செய்கிறாய். என்ன வியப்பான செயல் இது?