Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 702)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
க்லுப்த ச்யாமா மணிபி: அஸிதை: க்ருஷ்ணபக்ஷேண ஜுஷ்டா ச்ரேய: பும்ஸாம் ஜநயஸி கதிம் தக்ஷிணாம் உத்வஹந்தீ தேந ஆஸ்மாகம் ப்ரதயஸி பரம் பாதுகே தத்வ வித்பி: மௌளௌ த்ருஷ்டாம் நிகம வசஸாம் முக்தி கால அவ்யவஸ்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது இந்த்ரநீலக் கற்களால் நீ கருத்த நிறம் கொண்டு, இரவுப்பொழுது போன்று உள்ளாய். க்ருஷ்ணனுக்கு வேண்டியவர்களால் வணங்கப்படுகிறாய் (க்ருஷ்ணபக்ஷத்தால் அடையப் பெற்றாய்). சிறந்த நடையைக் கொண்டுள்ளாய் (தக்ஷிணாயனம்). இப்படியாக உன்னைப் பற்றிய உண்மை அறிந்த அனைவருக்கும் மோக்ஷம் உண்டாக்குகிறாய். இதனால் உபநிஷத் கூறுவது போன்று முக்தி அடைவதற்கு பகல் நேரம், சுக்லபக்ஷம், உத்தராயணம் என்பது அவசியம் என்னும் விதிமுறைகள், உன்னை அடைந்தவர்களுக்கு இல்லை என்று எங்களுக்கு உணர்த்துகிறாய்.