Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 701)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

த்வயி விநிஹிதம் ஏதத் கேபி பச்யந்தி மந்தா: சதமகமணி ஜாலம் சார்ங்கிண: பாதரக்ஷே வயம் இதம் இஹ வித்ம: ப்ராணிநாம் பாவுகாநாம் ஹ்ருதய க்ருஹ குஹாப்ய: பீதம் அந்தம் தமிஸ்ரம்

சார்ங்கம் என்னும் வில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நன்றாக உணராதவர்கள், உன்னிடம் காணப்படும் கற்களை வெறும் இந்த்ரநீலக் கற்கள் என்றே காண்கின்றனர். ஆனால் நாங்கள் இவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்றால் – உன்னை உபாஸிப்பவர்களின் மனம் என்னும் குகையில் காணப்படும் அறியாமை என்னும் இருளை நீ குடித்த காரணத்தால் உண்டான இருள் (கருமை) என்று எண்ணுகிறோம்.