Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 700)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
பதகிஸலய ஸங்காத் பாதுகே பத்ரளச்ரீ: நகமணிபி: உதாரை நித்ய நிஷ்பந்ந புஷ்பா சதமக மணி நீலா சௌரி லாவண்ய ஸிந்தோ: நிபிடதம தமாலா காபி வேலாவநீ த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் சிறிய திருவடிகள் சிவந்த துளிர்கள் போன்று, இலைகள் நிரம்பியதாகத் தோன்றுகிறது; பெருமை மிகுந்த வைரங்கள் போன்று காணப்படும் அவன் திருவடி நகங்கள் – மலர்கள் எப்போதும் உள்ளதாகத் தோன்றுகிறது; உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் கருமையாக உள்ளன. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற ஸமுத்திரத்தின் கரையில் காணப்படும் காடு போன்று நீ உள்ளாய்.