Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 699)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
பரிசரதி விதௌ த்வாம் பாதுகே ரங்கபர்த்து: பதஸரஸிஜ ப்ருங்கை: பாஸுரை: இந்த்ரநீலை: ப்ரகடித யமுநா ஔகா பக்தி நம்ரஸ்ய சம்போ: பரிணமயஸி சூடாவிஷ்ணுபத்யா: ப்ரயாகம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நான்முகன் வந்து வணங்கி நிற்கும்போது சிவனும் அப்படியே செய்கிறார். ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் மொய்க்கின்ற வண்டுகள் போன்று உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் உள்ளன. இவை யமுனையின் ப்ரவாஹம் போன்று கறுத்து காணப்படுகின்றன. உன்னை வணங்கும் சிவனின் தலையில் இந்த யமுனை நதியும் பாய்ந்து, அங்குள்ள கங்கைக்கு யமுனையின் சேர்க்கையை நீ உண்டாக்குகிறாய் போலும்.