Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 698)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
சதமகமணி பங்கை: உந்மயூகை: திசந்தீ சரணம் உபகதாநாம் ரங்கநாதேந ஸாம்யம் ப்ரதயஸி ஜகதி த்வம் பாதுகே ஹைதுகாநாம் உபநிஷத் உபகீதாம் தத்க்ரது ந்யாய வார்த்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியகோயிலுக்கு வந்து உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் சரணாகதி செய்தவர்கள், உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி காரணமாக, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியை ஒத்த நிறத்தை அடையும்படி நீ செய்கிறாய். இப்படியாக ஹேதுவாதம் செய்பவர்களுக்கு, உபநிஷத் கூறும் தத்க்ரது ந்யாயத்தை நீ உணர்த்தியபடி உள்ளாய்.
எம்பெருமானை நாம் எவ்விதம் உபாஸனை செய்கிறோமோ, அவ்விதமாகவே நாம் அடைவோம் என்பது உபநிஷத் கருத்து. இதற்கு தத்க்ரது ந்யாயம் என்று பெயர். இதனை ஒப்புக் கொள்ளாதவர்கள் ஹேதுவாதிகள் ஆவர்.