Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 697)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

வலமதந மணீநாம் தாமபி: தாவகாநாம் மதுரிபு பதரக்ஷே வாஸரை: அவ்யபேதா அபிஸரணபராணாம் வல்லவீநாம் ததாஸீத் சமித குரு பயார்த்தி: சர்வரீ காசித் அந்யா

மது என்னும் அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! க்ருஷ்ணனாகிய ஸ்ரீரங்கநாதனிடம் போகத் துடித்த கோபிகைகள், அச்சப்பட்டு, மிகுந்த சிரமத்துடன் வீட்டிலேயே சிலர் அடங்கினர். அப்படிப்பட்ட அச்சத்தை நீங்குவதற்காக, பகலிலேயே உண்டான இரவுப் பொழுதை உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது உண்டாக்கியது (கண்ணனுடன் இருந்த அந்த இரவு கூட முடிந்து விடும், ஆனால் ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உண்டாக்கிய இந்த இரவு முடியாது, ஆகவே எப்போதும் ஸ்ரீரங்கநாதனுடன் இருக்கலாம் என்று கருத்து).