Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 696)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

மத்வா மஷீம் பரிமிதாம் பவதீ ததந்யாம் வைகுண்ட பாதரஸிகே மணிபாதுகே ஸ்வாந் அங்க்தே ஸ்வயம் கிரண லேபிபி: இந்த்ரநீலை: ஆசாதடேஷு லளிதாந் அபதாநவர்ணாந்

ஸ்ரீவைகுண்டநாதனான பெரியபெருமாளின் திருவடிகளுடைய சுவையை அறிந்த பாதுகையே! இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவளே! உன்னுடைய மேன்மைகளை எழுதுவதற்கு இந்த்ரநீலக் கற்களின் ஒளி தவிர, மற்ற ஒளிகளாக உள்ள மை போதாது என்று எண்ணினாய் போலும். அதனால்தான் அனைத்துத் திசைகள் என்னும் காகிதங்களில், இன்பமாக உள்ள உன் சரிதங்களை, உன்னில் பதிக்கப்பட்ட இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் மை கொண்டு, நீயாகவே எழுதுகிறாய் போலும்.