Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 695)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
ப்ரத்யேமி ரங்கந்ருபதே: மணிபாதுகே த்வாம் க்ருஷ்ண அந்தரங்க ருசிபி: ஹரி நீல ரத்நை: விச்வ அபராத ஸஹநாய பதம் ததீயம் விச்வ அம்பராம் பகவதீம் ஸமயே பஜந்தீம்
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்திற்கு ஒத்தபடியான இந்த்ரநீலக் கற்கள் கொண்டு நீ காணப்படுகிறாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்தவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தையும் நீ பொறுத்துக் கொள்கிறாய். இப்படியாக நீ நிறத்தில் மட்டுமே அல்லாமல், குணத்திலும் ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளை அடைத்து நிற்கின்ற பூமிப்பிராட்டியே என்று நான் எண்ணுகிறேன்.