Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 694)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
த்ரஷ்டும் கதாசந பதாவநி நைவ ஜந்து: சக்நோதி சாச்வத நிதிம் நிஹிதம் குஹாயாம் க்ருஷ்ண அநுரூப ஹரிநீல விசேஷ த்ருச்யா ஸித்தாஞ்ஜநம் த்வம் அஸி யஸ்ய ந தேவி த்ருஷ்டே:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! ஸ்ரீரங்கநாதனுடன் இருப்பதற்குத் தகுதி கொண்டதான இந்த்ரநீலக் கற்களுடன் கூடியவளாக நீ மிகவும் அழகாகக் காணப்படுகிறாய். மறைந்துள்ள புதையல்களைப் பார்ப்பதற்குக் கண்களில் தடவிக் கொள்ளும் மை போன்ற நீ, யார் ஒருவனுடைய கண்களில் பூசப்படாமல் உள்ளாயோ - அப்படிப்பட்ட மனிதர்களால், தங்கள் இதயம் என்ற குகைக்குள் அந்தர்யாமியாகப் புதையல் போன்றுள்ள ஸ்ரீரங்கநாதனை எப்போதும் காண இயலாது என்பது நிச்சயம்; அந்த நிதியைக் காண்பதற்கான சக்தி உள்ளவனாக அவன் ஆகவே மாட்டான்.