Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 693)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
க்லுப்த அவகுண்டந விதி: மணிபாதரக்ஷே நீலாம்சுகை: வலபிதச்ம ஸமுத்பவை: தே ஸங்கச்சதே முநி ஜநஸ்ய மதி: ஸமாதௌ ராத்ரௌ ஸமஸ்த ஜகதாம் ரமணேந லக்ஷ்ம்யா:
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் த்யானித்தபடி உள்ள முனிவர்களின் புத்தியானது ஒரு பெண் போன்று உள்ளதாக வைப்போம். அவர்கள் த்யானிக்கும் நேரம் என்பது இரவு நேரம் போன்று உள்ளது. அந்த நேரத்தில், அந்தப் பெண், உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் கருப்புத் துணியால் தன்னை மூடிக்கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை அடைகிறாள்.