Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 692)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
மாத: ஸலீலம் அதிகம்ய விஹாரவேலாம் காந்திம் ஸமுத்வஹஸி காஞ்சந பாதுகே த்வம் லக்ஷ்மீ கடாக்ஷ ருசிரை: ஹரி நீல ரத்நை: லாவண்ய ஸிந்து ப்ருஷதைரிவ ரங்கதாம்ந:
தங்கமயமான பாதுகையே! தாயே! நீ உல்லாஸமாக ஸ்ரீரங்கநாதனுடன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தைப் பார்த்தால், ஸமுத்திரத்தின் கரையை அடைந்தது போன்று உள்ளது. உன்னுடன் இருக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் அழகு என்பதாகவே அந்த ஸமுத்திரம் உள்ளது. அங்கு வீசி எறிகின்ற அலைகள் போன்று ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் உள்ளது. உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், அந்த ஸமுத்திரத்தின் அலைகள் போன்று உள்ளன. இப்படியாக நீ ஓர் ஒப்பற்ற அழகைப் பெறுகிறாய்.