Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 691)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

அந்விச்சதாம் கிமபி தத்வம் அநந்ய த்ருச்யம் ஸம்யக் ப்ரகாச ஜநநீ த்ருத க்ருஷ்ண ரூபா பாதாவநி ஸ்புரஸி வாஸவ ரத்ந ரம்யா மத்யே ஸமாதி நயநஸ்ய கநீநிகேவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்திரநீலக் கற்கள் மூலம் நீ இன்பமாகவும், மற்றவர்களுக்கு நல்ல அறிவை அளிப்பவளாகவும், ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்தை அடைந்தவளாகவும் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும், மற்ற பலன்களையும் எண்ணிப் பார்க்காதவர்களால் காணக் கூடியவனாக உள்ள உயர்ந்தவனான ஸ்ரீரங்கநாதனை – த்யானம் செய்பவர்களின் த்யானம் என்ற கண்ணின் நடுவில் உள்ள கருப்பு விழி போல் நீ நின்று, காண்பிக்கிறாய்.