Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 690)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
சதம கோபல பங்க மநோஹரா விஹரஸே முரமர்த்தந பாதுகே மணிகிரீட கணேஷு திவௌகஸாம் மதுகரீவ மநோரம பங்க்திஷு
முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் முன்பாக தேவர்களின் க்ரீடங்கள் அழகாக, வரிசையாகக் காணப்படுகின்றன. அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களை மலர்கள் என்று எண்ணி மொய்க்கும் வண்டுகளாக, உனது இந்த்ரநீலக் கற்களின் வரிசைகள் உள்ளன. இப்படியாக பெண் வண்டு போன்று நீ விளையாடுகிறாய் போலும்.