Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 689)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

ஜீவயதி அம்ருத வர்ஷிணீ ப்ரஜா: தாவகீ தநுஜவைரி பாதுகே கோர ஸம்ஸரண கர்மநாசிநீ காளிகேவ ஹரி நீல பத்ததி

அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் வரிசையானது, மேகங்களின் வரிசை போன்று உள்ளது. இது மோக்ஷம் என்னும் அமிர்த மழையைப் பொழிவதாகவும், கடுமையான ஸம்ஸாரம் என்னும் கோடை காலத்தைப் போக்கச் செய்வதாகவும் உள்ளது. இப்படியாக இந்தக் கற்கள் மக்களைப் பிழைக்க வைக்கிறது.