Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 688)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

அபங்குராம் அச்யுத பாதரக்ஷே மாந்யாம் மஹாநீல ருசிம் த்வதீயாம் நி:ச்ரேய ஸத்வார கவாடிகாயா: சங்கே ஸமுத்பாடந குஞ்சிகாம் ந:

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழியாமல், ஒடியாமல், போற்றத்தக்கதாக உள்ளது. இந்த ஒளியானது தலையில் விழும்போது, அங்குள்ள ப்ரஹ்மதந்த்ரம் என்னும் த்வாரம் வழியாக மேல்நோக்கிக் கிளம்பும் ஆத்மாவானது மோக்ஷத்தை அடையும்போது, அந்த பரமபதத்தின் கோட்டை வாசல் கதவைத் திறக்கும் சாவி போன்று உள்ளது.