Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 687)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
நேத்ரேஷு பும்ஸாம் தவ பாதரக்ஷே நீலாச்ம பாஸா நிஹித அஞ்ஜநேஷு ச்ரியா ஸமம் ஸம்ச்ரித ரங்ககோச: நிதி: ஸ்வயம் வ்யக்திம் உபைதி நித்யம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது புதையலைக் காண உதவும் மை போன்று உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த மை தடவப்பட்ட கண்களைக் கொண்ட மனிதர்களுக்கு, ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கவிமானம் என்னும் பெட்டியில் காணப்படும் ஸ்ரீரங்கநாதன் என்னும் புதையல், தானாகவே எப்போதும் புலப்பட்டபடி உள்ளது.